143 கிலோ புகையிலை கார் பறிமுதல்: 2 பேர் கைது
143 கிலோ புகையிலை கார் பறிமுதல்: 2 பேர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம், காவேரி நகர், புதிய காவிரி பாலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., குணசேகரன் உள்ளிட்ட போலீசார், நேற்று காலை, 7:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, 'மாருதி ஈகோ' காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 142.750 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகையிலை பொருட்கள், கார் மற்றும் பவானியை சேர்ந்த வில்சன், 67, என்பவரை கைது செய்தனர். இதேபோல், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்த திருமுருகன், 58, என்பவரை கைது செய்து, 10 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement