ஹிந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க.,மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்



ஹிந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க.,மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்



கரூர்: ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூர் தலைமை தபால் நிலையம் முன், தமிழ்நாடு தி.மு.க., மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணமூர்த்தி தலைமை வகித்தார். மும்மொழி கொள்கை என்ற பெயரில், ஹிந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்தம் செய்கிறது, தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறவும், யு.ஜி.சி. வரைவு கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். தி.மு.க.,வினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகர செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி செயலாளர்கள் ராஜா, குமார், ஜோதிபாசு, சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement