எலி 'ஸ்ப்ர ே 'வில் விளையாடிய நான்கு சிறுவர்கள் 'அட்மிட்'

அன்னவாசல்:எலி ஸ்ப்ரேயை வைத்து விளையாடிய நான்கு சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த ராமராசு மகன் ரிசிகேஸ், 6, பழனிசாமி மகன் ரித்திக், 6, வீரப்பன் மகன் கருப்பசாமி, 5, பரமசிவம் மகன் தனபிரியன், 5, ஆகிய நான்கு சிறுவர்கள், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் கிடந்த எலி ஸ்ப்ரேயை எடுத்து விளையாடினர். அதில் இருந்த நுரையை சிறுவர்கள் சுவைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால், சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக அவர்களை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுவர்களுக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், புதுக்கோட்டை அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement