ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி செவ்வாய்க்கிழமை வாரச்சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். இன்று (பிப்.26)மகா சிவராத்திரியும், தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் ஆடு, கோழிகள் நல்ல விலைக்கு விற்பனையானது.

அதிகாலை 3:00 மணிக்கு துவங்கிய சந்தையில் வழக்கத்தை விட ஆடு கோழிகள் வரத்தும், வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. 10 கிலோ எடை ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலைபோனது. ரூ.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement