பயன்பாட்டிற்கு வராத ஆடு வதைக்கூடங்கள்

சோழவந்தான்: பேரூராட்சிகளில் செயல்படாத நவீன ஆடு வதைக் கூடங்களில் சுகாதாரமற்ற முறையில் ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சி விற்பனை செல்கிறது.
சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லுார் பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆடு இறைச்சிக் கூடங்கள் ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு இன்றுவரை செயல்படாமல் உள்ளன. கறிக்கடை வைத்திருப்போர் பேரூராட்சி வதைக் கூடத்திற்கு ஆடுகளை கொண்டு சென்று டாக்டர்கள் பரிசோதித்த பின் ஆடுகளை அறுத்து சுத்தப்படுத்தி கறியை மட்டும் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இந்த கூடம் செயல்படாததால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இறைச்சி குறித்து புகார்கள் வந்தால் மட்டுமே அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்கின்றனர்.
சமூக ஆர்வலர் மாணிக்கமூர்த்தி: மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து உள்ள ரோட்டோரம் விற்பனை செய்கின்றனர். வாகனங்களால் பறக்கும் புழுதிகள் இறைச்சியில் படிந்து சுகாதாரமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டுக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. மேலும் நோய் பாதித்த ஆடு, மாடு, கோழிகளையும் வெட்டி விற்பதாகவும் புகார்கள் வருகின்றன. சிலர் வாகனங்களில் வைத்து தரமற்ற மீன்களை விற்கின்றனர்.
தரமான இறைச்சி விற்கிறதா என உணவுப் பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு