கோயில் முன்பு வாகன ஆக்கிரமிப்பு

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பள்ளபட்டி ரோட்டில் உள்ள இக்கோயில் முன் பக்தர்கள், கடைவீதிகளுக்கு வருவோர் தங்கள் டூவீலர்களை அதிகளவில் நிறுத்திச் செல்கின்றனர். கார்களையும் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதால் அப்பகுதியில் பாதசாரிகள் நடக்க முடியாதநிலை ஏற்படுகிறது.
இதனால் ஏற்கனவே நிறுத்தியவர்கள், டூவீலர்களை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கோயிலுக்குள் செல்லவும், கொடிமரம் முன் நின்று அம்மனை வழிபடவும் முடியாத நிலை உள்ளது. மேலும் ஷேர் ஆட்டோக்கள், ஆக்கிரமிப்பு கடைகளால், வத்தலகுண்டு குருவித்துறை போன்ற நெருக்கடியான சாலையில் போக்குவரத்து பாதிக்கிறது. வெள்ளி, செவ்வாய், விசேஷ நாட்களில் கோயில் முன் நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்நேரங்களில் பக்தர்கள் படும் அவதி சொல்லி மாளாது. போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்' பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு