மதுரையில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் தனியாக போராட்டம்

மதுரை: 'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றகோரி மதுரையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

இந்த கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ அமைப்பு மறியல் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதற்கு ஐகோர்ட் கிளை தடை விதித்ததால், ஆர்ப்பாட்டமாக நடத்தினர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திரண்டு கோஷமிட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், உயர்மட்ட குழுஉறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், ஜோயல்ராஜ், தமிழ், வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலைவர் கோபி, செயலாளர் முகைதீன் அப்துல்காதர், பொருளாளர் முத்துப்பாண்டி, நிர்வாகிகள் சுரேஷ், முருகானந்தம், மணிமேகலை, ராம்குமார், பழனியப்பன், செந்தில், வள்ளி, செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசு ஊழியர்கள் போராட்டம்



அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர் சங்க பொதுச் செயலாளர் ஜெயகணேஷ், சுகாதார செவிலியர் சங்க நிர்வாகி பிரேமாஆனந்தி, பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரி அலுவலர் சங்க பொதுச்செயலாளர் மனோகரன், கிராம உதவியாளர் சங்க துணைத்தலைவர் மாரியப்பன், சாலை பராமரிப்பு ஊழியர் சங்க தலைவர் மாரி, கால்நடை ஆய்வாளர் சங்க செயலாளர் முருகையன், சுகாதார போக்குவரத்து துறை பொறுப்பாளர் கணேசன், சத்துணவு ஊழியர் சங்க பொருளாளர நுார்ஜஹான் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement