சிவன் கோயில்களில் 3 நாள் தொடர் பூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 3 நாட்கள் விழாக்கள் நடக்கின்றன.

சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரர், சொக்கநாதர் கோயில், காசி விசுவநாதர் கோயில், கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் சொக்கநாதர், மலைக்குப் பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு நேற்று(பிப்.25) பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேகம், பூஜை நடந்தது. இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய விடிய பூஜை நடக்கிறது. நாளை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.

Advertisement