மாமதுரை கவியரங்கம்

மதுரை:" மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'இரும்பின் முதல்வன் தமிழன்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இரா.வரதராஜன் வரவேற்றார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம், துணைச்செயலாளர் கு.க. கங்காதரன் முன்னிலை வகித்தனர். பேரின்பநாதனின் 'பல்சுவை பாக்கள்' கவிதை நுால் வெளியிடப்பட்டது. கவிஞர் நாகராஜன் பாடல் பாடினார்.

கவிஞர்கள் சக்திவேல், வரதராஜன், கல்யாணசுந்தரம், முருகு பாரதி, குறளடியான், அழகையா, லிங்கம்மாள், முனியாண்டி, ஜெயராமன், பழனி, வித்யாபாரதி, பொன்.பாண்டி, நடராஜன், ஆறுமுகம், இதயத்துல்லா, பால் பேரின்பநாதன், சுந்தரம் பாண்டி, அழகையா ஆகியோர் கவிதை பாடினர்.

Advertisement