குன்றத்தில் கப்பரை பூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை விழா நடந்தது.
சிவபெருமான், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமி உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைத்து பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைத்து பூஜை நடந்தது.
மூலவர்கள் அங்காளபரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து பூசாரிகள் இரவு 12:00 மணிக்கு முனியாண்டி கோயில் சென்று பூஜை நடத்தினர்.
இன்று (பிப். 26) சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்ஸவர் அங்காளபரமேஸ்வரி புறப்பாடாகி குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருளுவார். தினமும் அபிஷேக, ஆராதனை நடக்கும். நாளை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூச்சப்பரம் கொண்டு செல்லப்பட்டு, அம்மன் எழுந்தருளி பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement