இளையான்குடியில் மழை விவசாயிகள் அவதி

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழையினால் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராமப் பகுதிகளில் நெல் அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.

இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயில் அடித்து வந்தது.

நேற்று மதியம் 2:30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

இளையான்குடி பகுதி ரோடுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கீழநெட்டூர், மேலநெட்டூர், வேலடிமடை உள்ளிட்ட கிராம பகுதிகளில் தற்போது தான் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நேற்று பெய்த மழையினால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

தேவகோட்டை: தேவகோட்டையில் சில தினங்களாக காலை 7:00 மணிவரை பனியும் குளிருமாக இருந்து வரும் நிலையில் பகலில் வெயிலும் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முற்பகலில் மேக மூட்டமாக இருந்த நிலையில் மதியம் நகரில் கனமழை பெய்தது. அறுவடை பணி நடந்து வரும் நிலையில் மழையால் அறுவடை பணி பாதித்தது.

* திருப்புத்துாரில் கடந்த சில நாட்களாக பனி குறைந்து வெப்பம் அதிகரிக்கத் துவங்கியது. இந்நிலையில் பல வாரங்களுக்கு பின்னர் மாலை 4:00 மணி அளவில் திடீரென்று மழை பெய்யத் துவங்கியது. 30 நிமிடங்களுக்கும் மேலாக மிதமாக பெய்த மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்தது.

Advertisement