மாசித்திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீரமுத்தி அம்மன் கோயில் மாசித் திருவிழா பிப். 18 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது நேற்று காலை 10:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

மாலை 4:30 மணிக்கு முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் நடந்தது.

பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். நாளை காலை 9:00 மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை வீரமுத்தி அம்மன் கோயில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement