அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஓடைகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கேபியான் தடுப்பணைகள் கட்டப்பட்டது.

கால்வாய்களில் ஓடிவரும் தண்ணீரை நிலத்தடியில் சேமிக்கும் விதமாக பெரிய குண்டுகற்களை கொண்டு தடுப்பணை கட்டப்பட்டு கம்பிகளால் லாக் செய்யப்பட்டது. தடுப்பணைக்கு முன் சில மீட்டர் தூரத்தில் நிலத்தடி நீர்மட்ட கிணறும் அமைக்கப்பட்டது. பல இடங்களில் சிறிய கற்களை பயன்படுத்தியே தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு பெய்த மழையில் பல தடுப்பணை கற்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு வெறும் பெயர் பலகை மட்டுமே எஞ்சி நிற்கிறது.

பல ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் தரமான கற்களை கொண்டு முறையாக அமைக்காததால் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement