மொனாகோ செஸ்: ஹம்பி 2வது இடம்

மொனாகோ: மொனாகோ செஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஹம்பி 2வது இடம் பிடித்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நடக்கிறது. இதற்கான போட்டிகள் 6 கட்டமாக நடத்தப்படுகிறது.
மொனாக்கோவில் நடந்த 3ம் கட்டப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, ஹரிகா உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் ஹம்பி, கஜகஸ்தானின் பிபிசாரா அசாபயேவா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 55வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, சீனாவின் ஜோங்கி டான் மோதினர். இதில் ஹரிகா, கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். விறுவிறுப்பான இப்போட்டி 65வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்கினா, ஹம்பி, மங்கோலியாவின் பட்குயாக் முன்குந்துால் தலா 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். பின் 'டை பிரேக்கரில்' கோரியாச்கினா முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை ஹம்பி, பட்குயாக் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீராங்கனை ஹரிகா (4.0 புள்ளி) 7வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
மேலும்
-
போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 6ல் ஊர்வலம்
-
ஓய்வு நாளில் பணப்பலன் வழங்காததை கண்டித்து குடும்பத்துடன் ஊழியர் போராட்டம்
-
புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
-
வழக்கின் எப்.ஐ.ஆர்.,கள் மாயமான பிரச்னை கண்காணிப்பு அதிகாரி நியமிக்க கோர்ட் உத்தரவு
-
வன உரிமை சட்டத்தை குறைந்த அளவில் செயல்படுத்திய மாநிலம் தமிழகம் பட்டா கோரிய 45,000 மனுக்கள் தள்ளுபடி
-
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்