இசையால் நிம்மதியை உணர்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: இசையின் மூலம் ஒரு நிம்மதியை உணர்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நடந்த பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது: இது போன்ற நிகழ்வுகள் நாட்டின் கலாசாரம் மற்றும் கலைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்ல, அவற்றின் மூலம் ஒரு நிம்மதியை உணர்கிறேன். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இங்கு சுந்தர் நர்சரிக்கு வந்திருப்பதால், ஆகா கானை நினைவில் கொள்வது அவசியம். சுந்தர் நர்சரியை அழகுபடுத்துவதில் அவரது பங்களிப்பு பல கலைஞர்களுக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி மக்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது, இது அதன் மிகப்பெரிய வெற்றியாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இசை நிகழ்ச்சியை கையில் தாளம் போட்டு பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.

Advertisement