ராம்குமார்-மைனேனி ஏமாற்றம்

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார், மைனேனி ஜோடி தோல்வியடைந்தது.
பெங்களூருவில், ஏ.டி.பி., சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், சீனதைபேயின் ரே ஹோ ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை அனிருத், ரே ஹோ ஜோடி 6-4 எனக் கைப்பற்றியது. பின் எழுச்சி கண்ட ராம்குமார், மைனேனி ஜோடி 2வது செட்டை 6-2 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' அசத்திய இந்தியா-சீனதைபே ஜோடி 10-8 என வென்றது. ஒரு மணி நேரம், 12 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ராம்குமார், மைனேனி ஜோடி 4-6, 6-2, 8-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சித்தாந்த் பந்தியா, பரிக் ஷித் சோமானி ஜோடி 3-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பிளேக் பேல்டன், மாத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மேலும்
-
போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 6ல் ஊர்வலம்
-
ஓய்வு நாளில் பணப்பலன் வழங்காததை கண்டித்து குடும்பத்துடன் ஊழியர் போராட்டம்
-
புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
-
வழக்கின் எப்.ஐ.ஆர்.,கள் மாயமான பிரச்னை கண்காணிப்பு அதிகாரி நியமிக்க கோர்ட் உத்தரவு
-
வன உரிமை சட்டத்தை குறைந்த அளவில் செயல்படுத்திய மாநிலம் தமிழகம் பட்டா கோரிய 45,000 மனுக்கள் தள்ளுபடி
-
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்