ரஞ்சி: விதர்பா அணி அபாரம்

நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 342 ரன் எடுத்தது. விதர்பா அணி 37 ரன் முன்னிலை பெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக்கிறது. இதில் விதர்பா, கேரளா அணிகள் விளையாடுகின்றன. விதர்பா அணி முதல் இன்னிங்சில் 379 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 131/3 ரன் எடுத்திருந்தது. ஆதித்யா (66), சச்சின் பேபி (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் நான்காவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது ஆதித்யா சர்வதே (79) அவுட்டானார். சல்மான் நிசார் (21), முகமது அசார் (34), ஜலஜ் சக்சேனா (28) நிலைக்கவில்லை. கேப்டன் சச்சின் பேபி (98) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஈடன் ஆப்பிள் டாம் (10), நிதிஷ் (1) ஏமாற்றினர்.
கேரளா அணி முதல் இன்னிங்சில் 342 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. விதர்பா சார்பில் தர்ஷன், ஹர்ஷ் துபே, பார்த் தலா 3 விக்கெட் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் 37 ரன் முன்னிலை பெற்ற விதர்பா அணி, இப்போட்டியை 'டிரா' செய்தால் கோப்பை வெல்லலாம்.
முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்த விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்ஷ் துபே, ரஞ்சி கோப்பை அரங்கில் ஒரு சீசனில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர் என்ற வரலாறு படைத்தார். இம்முறை 10 போட்டியில், 69 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் 7 முறை, ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்தார். இதற்கு முன், 2018-19 சீசனில் பீகார் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஷுதோஷ் அமான், 68 விக்கெட் (8 போட்டி) கைப்பற்றி இருந்தார்.
மேலும்
-
'ஜிபே'வில் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிடை நீக்கம்
-
போக்சோவில் ஆசிரியர் கைது விடுவிக்க மாணவர்கள் மறியல்
-
தொழில் அதிபர் வீட்டில் ஈ.டி., சோதனை
-
போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 6ல் ஊர்வலம்
-
ஓய்வு நாளில் பணப்பலன் வழங்காததை கண்டித்து குடும்பத்துடன் ஊழியர் போராட்டம்
-
புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்