ஈட்டி எறிதல்: சச்சின் காயம்

மும்பை: இந்திய ஓபன் ஈட்டி எறிதல் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சச்சின் யாதவ் விலகினார்.
நவி மும்பையில், வரும் மார்ச் 20-21ல் இந்திய ஓபன் எறிதல் போட்டி நடக்கவுள்ளது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் சச்சின் யாதவ் 25, பங்கேற்க இருந்தார். சமீபத்தில் உத்தரகாண்ட்டில் நடந்த 38வது தேசிய விளையாட்டு ஈட்டி எறிதலில் தங்கம் (84.39 மீ.,) வென்று சாதனை படைத்த இவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீள நீண்ட நாட்கள் தேவைப்படும் என்பதால், இந்திய ஓபனில் இருந்து விலகுவதாக சச்சின் அறிவித்தார்.


சச்சின் பயிற்சியாளர் நாவல் சிங் கூறுகையில், ''சச்சினின் கணுக்கால் காயம் விரைவில் குணமடைய வாய்ப்பில்லை என்பதால் இந்திய ஓபனில் பங்கேற்கமாட்டார். காயத்தில் இருந்து மீண்டு, முழு உடற்தகுதியுடன் பெடரேஷன் கோப்பையில் விளையாடுவது எங்களது அடுத்த இலக்கு,'' என்றார்.

Advertisement