பராகு செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'

பராகு: பராகு செஸ் தொடரின் 2வது சுற்றுப் போட்டியை இந்தியாவின் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.
செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் 2வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, துருக்கியின் எடிஸ் குரேல் மோதினர். இதில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 46வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த், 45வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
சீனாவின் யி வெய், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதிய மற்றொரு 2வது சுற்றுப் போட்டி 45வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இரண்டு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் சாமுவேல் ஷாங்க்லேண்ட் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். பிரக்ஞானந்தா, அனிஷ் கிரி, செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென், டேவிட் நவாரா, சீனாவின் குவாங் லீம் லே தலா 1.0 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேலும்
-
போக்சோவில் ஆசிரியர் கைது விடுவிக்க மாணவர்கள் மறியல்
-
தொழில் அதிபர் வீட்டில் ஈ.டி., சோதனை
-
போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 6ல் ஊர்வலம்
-
ஓய்வு நாளில் பணப்பலன் வழங்காததை கண்டித்து குடும்பத்துடன் ஊழியர் போராட்டம்
-
புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
-
வழக்கின் எப்.ஐ.ஆர்.,கள் மாயமான பிரச்னை கண்காணிப்பு அதிகாரி நியமிக்க கோர்ட் உத்தரவு