ஆண்டுதோறும் 35-40 போர் விமானங்கள் தேவை: விமானப்படை தளபதி வலியுறுத்தல்

3


புதுடில்லி: இந்தியா ஆண்டுதோறும் 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார்.


இது குறித்து, டில்லியில் நடந்த மாநாட்டில் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கூறியதாவது: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 24 தேஜாஸ் எம்கே1ஏ ஜெட் விமானங்களை தயாரிக்கும். இந்திய விமானப்படை (IAF) தனது பழைய விமானங்களை மாற்றுவதற்கு ஆண்டுக்கு குறைந்தது 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும். உள்நாட்டு விமான உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.


உலக சந்தையில் கிடைக்கும் பொருட்களில் 90 சதவீதம் அல்லது 85 சதவீதத்தை ஒரு உள்நாட்டு நிறுவனம் வழங்கினால் நாங்கள் அதற்கு ஆதரவளிப்போம். பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தன்னிறைவு மிக முக்கியமானது. வெளிநாட்டு சப்ளையர்களை நம்பியிருப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement