'ஜூஸ்' என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி

நாகர்கோவில்: ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே செறுவல்லுார் தேவிக்கோடு பனச்சகாலையைச் சேர்ந்தவர் அனில், 38; மாங்காய் பறிக்கும் தொழிலாளி. மனைவி அருணா. தம்பதியின் மகன்கள் அனிருத், 4, ஆரோன், 2. நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ள அறையில் அனிலுடன் அருணா பேசிக் கொண்டிருந்தார். விளையாடிக் கொண்டிருந்த ஆரோன் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, ஜூஸ் என நினைத்து குடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அழுத சிறுவனை, திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிறுவன் இறந்தான். பளுகல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement