மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஓசூர்: ஓசூர், முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு மின்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் காந்தி தலைமை வகித்தார். ஓசூர் உதவி செயற்பொறியாளர் சேதுராமன், உதவி பொறியாளர் கண்ணையன் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக அலட்சியம், அறியாமை காரணமாக தான் மின் உயிரிழப்பு ஏற்ப-டுகின்றது. மின்சாரம் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். மழை நேரங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில், மின்சார கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதா என்பதை உறுதி செய்த பின் நடந்து செல்ல வேண்டும். சார்ஜ்போட்டு மொபைல்போனை பயன்ப-டுத்தக் கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், மின்வாரியத்-திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, கேட்டுக்-கொண்டனர்.
கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உட்பட பல்வேறு போட்டி-களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்-பட்டது. மாநில அளவிலான வாள் சண்டை, வாலிபால் போட்டி-களில் வென்று தங்கம், வெள்ளி, வெண்கலம் பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தலைமையாசிரியர் காந்தி பாராட்டினார். மின்வாரிய முகவர்கள் குமார், தனபாலன், மின்பாதை ஆய்வாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கர்நாடகா தயாரிப்புகளில் கன்னட மொழி கட்டாயம்; மாநில அரசு கண்டிப்பான உத்தரவு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 30,159 மாணவர்கள் பிளஸ் 1ல் 30,499 பேர் தேர்வில் பங்கேற்பு
-
பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு
-
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கூட்டம்; அ.தி.மு.க., - த.வா.க.,வினர் வெளிநடப்பு
-
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு