மாணவி கால்கள் மீது ஏறிய டிப்பர் லாரி: போராட்டம் நடத்த திரண்ட மக்கள்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மாதரசனப்பள்ளியை சேர்ந்தவர் முரளி மகள் லட்சுமி, 17, சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
நேற்று காலை மகளை பள்ளியில் விட, அவரது தாய் முனிரத்தினா ஸ்கூட்டரில் அழைத்து வந்தார். சூளகிரி ரிங்ரோட்டில் வந்த போது, அவ்வழி-யாக ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், மாணவி லட்சுமியின் இரு கால்கள் மீதும் லாரி ஏறியது. அவரது தாய் முனிரத்தினாவும் காயமடைந்தார். இருவரையும் மீட்டு, பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர்.சம்பவத்தை அறிந்த
அப் பகுதி மாணவ, மாணவியரின் பெற்றோர், பொதுமக்கள், வேகமாக வரும் டிப்பர் லாரிகளால் விபத்து ஏற்படுவதாக கூறி, பள்ளி முன் மறியல் போராட்டம் செய்ய திரண்டனர். சூளகிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்ப-தாக தெரிவித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான கரூர் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
கர்நாடகா தயாரிப்புகளில் கன்னட மொழி கட்டாயம்; மாநில அரசு கண்டிப்பான உத்தரவு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 30,159 மாணவர்கள் பிளஸ் 1ல் 30,499 பேர் தேர்வில் பங்கேற்பு
-
பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு
-
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கூட்டம்; அ.தி.மு.க., - த.வா.க.,வினர் வெளிநடப்பு
-
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு