.ஆண்டு முழுவதும் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாட அழைப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று (மார்ச் 1) கொண்டாடப்படுகிறது.

இதை-யொட்டி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஒன்றிய பகுதிகளி-லுள்ள, 179 பஞ்சாயத்துகள், ஓசூர் மாநகராட்சியில் உள்ள, 45 வார்டுகள், தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, 33 வார்டுகளில் உள்ள மொத்தம், 662 இடங்களில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கி, முதல்வர் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதேபோல், அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பிர-சாரம், அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வினி-யோகம் செய்ய வேண்டும்.மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள். தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாநகர மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்-பினர்கள், டவுன் பஞ்., தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதி-நிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத்தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அந்-தந்த பகுதிகளில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகர-ணங்கள், மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் மற்றும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஆண்டு முழுவதும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்-டாட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Advertisement