'நெக்' அறிவிக்கும் விலையே கொள்முதல் விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது

நாமக்கல்: 'நெக் அறிவிக்கும் விலையே கொள்முதல் விலையாக விற்-பனை செய்ய வேண்டும். அது, இன்று முதல் அமலுக்கு வருகி-றது' என, அவசரக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அகில இந்திய அளவில், 'நெக்' விலையை கண்காணிக்க கண்-காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அவசர கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. தேசிய முட்டை ஒருங்கிணைப்-புக்குழு (நெக்), நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், முட்டை நிலவரம் குறித்து விவாதிக்கப்-பட்டது. அப்போது, 'மைனஸ்' இன்றி, 'நெக்' அறிவிக்கும் விலையே கொள்முதல் விலையாக பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, 'சிங்கராஜ் கூறியதாவது:
இன்று (நேற்று), தென்மண்டல முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. நெக் நிர்ணயம் செய்யும் விலையைவிட, பண்-ணையில் கொள்முதல் செய்யும் விலை, 50, 60 காசு வித்தியாசம் வந்தது. அதனால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழகம் இணைந்து, நெக் என்ன விலை அறிவிக்கிறதோ அந்த விலைக்கு முட்டையை விற்பனை செய்ய வேண்டும் என, முடிவு செய்யப்-பட்டுள்ளது.
கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் கொள்முதல் விலை, 490 காசாக இருந்தது. பண்ணை கொள்முதல் விலை, 420, 425 காசாக இருந்தது. அதன் காரணமாக, 30 காசு குறைக்கப்பட்டது. அப்போதும், 10, 15 காசு குறைத்தே கொள்முதல் செய்தனர். அதனால், பண்ணையாளர்களுக்கும், நுகர்வோருக்கும் எவ்வித பயனும் இல்லை.
இடையில் உள்ள வித்தியாசத்தை குறைக்க வேண்டும் என்பதற்-காக, நெக் என்ன விலை அறிவிக்கிறதோ அந்த விலைக்குத்தான், பண்ணையில் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த விலை அறி-விப்பு நாளை (இன்று) முதல், வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். பண்ணையாளர்களும் விற்பனை செய்ய வேண்டும். இந்த விலை அறிவிப்பை, நாமக்கல் மண்டலத்தில் இன்று முதலும், மற்ற மண்டலங்களில், வரும், 6 முதல் அமல்படுத்தப்-படுகிறது. இந்தியா முழுவதும் நோ மைனஸ் ரேட். முதலாவதாக துவங்குவது நாமக்கல் மண்டலம். அதன்படி, தற்போது கொள்-முதல் விலை, 40 காசு குறைத்து, 420 காசாக நிர்ணயம் செய்யப்-படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement