தனியார் ஊழியர் தற்கொலை
வானுார் : கடன் பிரச்னையால், தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அடுத்த வி.பரங்கனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முகிலன், 36; தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன், திருச்சிற்றம்பலம் வெங்கடேஸ்வரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் துாங்கியவர் நேற்று காலை வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது, முகிலன் துாக்கில் தொங்கினார். பின், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா தயாரிப்புகளில் கன்னட மொழி கட்டாயம்; மாநில அரசு கண்டிப்பான உத்தரவு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 30,159 மாணவர்கள் பிளஸ் 1ல் 30,499 பேர் தேர்வில் பங்கேற்பு
-
பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு
-
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கூட்டம்; அ.தி.மு.க., - த.வா.க.,வினர் வெளிநடப்பு
-
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
Advertisement
Advertisement