10 ஆண்டாக பராமரிப்பு இல்லாத நிழற்குடை

இருளஞ்சேரி, கடம்பத்துார் ஒன்றியம் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருளஞ்சேரி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி வழியே கூவம், குமாரசேரி செல்லும் சாலை உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் இருளஞ்சேரி பகுதியில் மூன்று ஊராட்சிக்கு செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை, 2013 - 14ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது.

அதன்பின், 10 ஆண்டுகளாக நிழற்குடை எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாததால் சேதமடைந்து, விளம்பரங்கள் ஒட்டும் இடமாக மாறியுள்ளது.

இதனால், மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement