மத்திய அமைச்சர் மகளுக்கு பாலியல் தொந்தரவு: 4 பேர் கைது

மும்பை: மத்திய அமைச்சரும் பா.ஜ.,தலைவருமான ரக்ஷா காட்சே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை மஹாராஷ்டிரா போலீஸ் கைது செய்தது.
அளித்த புகாரின் பேரில், மஹாராஷ்டிரா போலீஸ் மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளது.
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சரும், பா.ஜ., தலைவருமான ரக்ஷா காட்சேவின் மகளுக்கு சிறுவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மஹாராஷ்டிராவின் கோத்தாலி கிராமத்தில் ஒரு யாத்திரை நடைபெறும். இந்த யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொள்வர். அந்த வகையில் இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாத்திரையில் அமைச்சர் ரக்ஷா காட்சேவின் மகள் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் யாத்திரையின்போது சிலர் கும்பலாக சேர்ந்து மத்திய இணையமைச்சரின் மகள் உள்பட மேலும் சில சிறுமிகளை கிண்டல் செய்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் மகளின் பாதுகாவலர் அவர்களை தடுத்துள்ளார். ஆனால் அவருடன் மோதலில் ஈடுபட்டு மீண்டும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
ரக்ஷா காட்சே அளித்த புகாரின் பேரில் மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
மண் அள்ளும் இயந்திரத்தை இயக்கிய 'போதை' சிறுவன்; 15க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம்
-
திருப்பரங்குன்றம் மலை ஆய்வுக்கு மத்திய அரசு மனு
-
விஷம் குடித்த தம்பதியில் கணவரும் உயிரிழப்பு
-
எளிமையான வினாக்கள்; இனிமையான துவக்கம்; பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
-
என்னை பாலியல் குற்றவாளி என்பதா; மார்க்சிஸ்ட் கம்யூ., சண்முகத்திற்கு சீமான் கண்டிப்பு
-
'கூட்டணியை காப்பது எங்கள் பொறுப்பு'