காபியில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து காதலனை கொல்ல முயற்சி; காதலி கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காபியில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து காதலனை கொல்ல முயன்ற காதலியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கீரிமேடு கிராமத்தில் சட்டக்கல்லூரி மாணவன் ஜெயசூர்யா. இவரும், ரம்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, ரம்யா தனக்கு தங்கை முறை என்பதை அறிந்த ஜெயசூர்யா, காதலை கைவிட்டுள்ளார்.
இதனை விரும்பாத ரம்யா, தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், இதனை ஜெயசூர்யா ஏற்க மறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயசூர்யாவை தீர்த்து கட்ட ரம்யா முடிவு செய்துள்ளார்.
தன்னை சந்திக்க வந்த ஜெயசூர்யாவுக்கு காபியில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார். அவரும் அதனை குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். தான் கொடுத்த விஷம் வேலை செய்கிறதா என்பதை அறிந்து கொள்ள, ஜெயசூர்யாவுக்கே வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு பதறிப்போன ஜெயசூர்யாவை குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகனுக்கு விஷம் கொடுத்ததாக ரம்யா மீது ஜெயசூர்யாவின் தந்தை புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரம்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, கேரளாவில் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்வதற்காக, தன்னுடைய காதலன் ஷரோன் ராஜூவை ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலி கிரீஷ்மா கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றத்திற்காக கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கிரீஷ்மா செய்த சம்பவத்தைப் போலவே, விழுப்புரத்தில் ரம்யா காதலனை கொல்ல துணிந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
நிர்மலா தேவி ஜாமின் மனு தள்ளுபடி
-
கல்வி அதிகாரிக்கு சிறை தண்டனை ரத்து; உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
-
அதீத மது போதையால் கல்லுாரி மாணவி பலி
-
தெலுங்கானா சுரங்க இடிபாடு தகவல் வெளியிட அரசு தயக்கம்
-
டீயில் எலி பேஸ்ட் கலந்து காதலனுக்கு கொடுத்த காதலி; வாட்ஸாப் உரையாடலால் உடைந்தது 'குட்டு'
-
அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு