கல்வி அதிகாரிக்கு சிறை தண்டனை ரத்து; உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்தவருக்கு சிறை தண்டனை விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி காமனேரி ஹெலின் ரோனிகா ஜேசுபெல் தாக்கல் செய்த மனு: திசையன்விளையிலுள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக 2019 ஜூன் 4 நியமிக்கப்பட்டேன். இதற்கு ஒப்புதல் மற்றும் அதற்குரிய பணப்பலன்களை வழங்க திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். அதை அனுமதித்த தனி நீதிபதி, ''மனுதாரரின் பணி நியமன தேதியிலிருந்து ஒப்புதல் அளித்து அதற்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்,'' என 2023ல் உத்தரவிட்டார். இதை நிறைவேற்றாததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த சின்னராஜூ மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பிப்.19ல் நீதிபதி எல்.விக்டோரியா கவுரி: 2019 லிருந்து ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டதை நிறைவேற்றவில்லை. மாறாக 2024 ஆக.,1 முதல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. சின்னராஜூவிற்கு ஒருவாரம் சாதாரண சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சின்னராஜூ தரப்பில், ''ஏற்கனவே தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்டனை, அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
மேலும்
-
கோவை - சேலம் பாசஞ்சர் இயக்கம் நிறுத்தம்; 3 ஆண்டாக 4 மாவட்ட பயணிகளுக்கு வருத்தம்
-
அருப்புக்கோட்டையில் 90 ஆசிரியர்களுக்கு சம்பளம் வரலை இளநிலை உதவியாளர் மெத்தனத்தால் தாமதம் என புகார்
-
தி.மு.க., ஆபீஸ் திறப்பு; அமைச்சர்கள் பங்கேற்பு
-
ரேஷன் கடை விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம்
-
நான்கு வழிச்சாலை பணிகளால் தொடரும் விபத்துக்கள்
-
காந்தம் போல் இழுக்கும் கரிகட்டா மலை