பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி திட்டக்குடி அருகே பரபரப்பு
திட்டக்குடி : திட்டக்குடி அருகே வீட்டின் முன்பு மொபைலில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம், மர்ம நபர் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி அடுத்த கொட்டாரம், அண்ணா நகரை சேர்ந்தவர் பில்கேட்ஸ் மனைவி மஞ்சுளா, 23. இவர், நேற்று இரவு 9:00 மணியளவில் வீட்டு வாசலில் மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நடந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், மஞ்சுளா அணிந்திருந்த ஏழரை சவரன் செயினை பறிக்க முயன்றார். இதையறிந்து மஞ்சுளா கூச்சலிட அருகிலுள்ளவர்கள் ஓடி வருவதற்குள் செயினில் இருந்த 4 கிராம் டாலரை மட்டும் மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
மர்ம நபர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து காயமடைந்த மஞ்சுளாவை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.