வீட்டுமனை பட்டா கேட்டுகலெக்டர் ஆபீசில் மனு


வீட்டுமனை பட்டா கேட்டுகலெக்டர் ஆபீசில் மனு


தர்மபுரி:அரசு புறம்போக்கு நிலத்தில், வீடு கட்டி வசதித்து வரும் தங்களுக்கு, பட்டா வழங்க வேண்டும் என, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாலப்பனஹள்ளியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா பாலப்பனஹள்ளியில் கடந்த, 70 ஆண்டுகளாக எங்களது முன்னோர்கள் வீடு கட்டி வசித்து வந்தனர். அவர்களை தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தற்போதும் வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் பட்டா நிலம் இல்லை. மிக குறைந்த வருமானத்தில் மட்டும் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு, பட்டா வழங்கி, எங்களது இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement