மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் சி.எஸ்.ஆர்., நிதி * பிரித்வி நிறுவனம் வழங்கல்

திருப்பூர்:திருப்பூர் மேற்கு ரோட்டரி மக்கள் மருத்துவ அறக்கட்டளைக்கு, பத்து லட்சம் ரூபாய் நிதியை பிரிதிவி நிறுவனம் வழங்கியது.
திருப்பூர், மங்கலம் அருகே அக்ரஹாரப்புத்துாரில் செயல்படும் திருப்பூர் மேற்கு ரோட்டரி மக்கள் மருத்துவமனைக்கு, சி.ஐ.ஆர்., திட்டத்தில் இருந்த, பத்து லட்சம் ரூபாய் நிதியை, பிரித்வி நிறுவன நிர்வாக இயக்குனர் பாலன் வழங்கினார். இந்த நிதியின் வாயிலாக, திருப்பூர் மேற்கு ரோட்டரி மக்கள் மருத்துவமனையில் புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் என்ற மருத்துவ கருவி கொள்முதல் செய்யப்பட உள்ளது. மருத்துவமனையில் உயர்தர பரிசோதனை சேவைகள் வழங்குவதற்கான அடிப்படையை உருவாக்குவதோடு, அப்பகுதியில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது.
--
திருப்பூர் மேற்கு ரோட்டரி மக்கள் மருத்துவ அறக்கட்டளைக்கு, பிரித்வி நிறுவனம் சார்பில், அதன் நிறுவனர் பாலன், பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.