அமல்படுத்துவது எப்போது?

அமல்படுத்துவது எப்போது?
டில்லி சட்டசபை தேர்தலில் வென்றால், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே, மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாக பா.ஜ., வாக்குறுதி அளித்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம் நடந்து, 10 நாட்களாகியும் இத்திட்டத்தை அமல்படுத்தவில்லை.
- ஆதிஷி, டில்லி முன்னாள் முதல்வர், ஆம் ஆத்மி
திறமையற்ற நிர்வாகம்!
நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்கனவே மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தங்கத்திற்காக கடன் வாங்குவதும் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் திறமையற்ற நிர்வாகமே இதற்கு காரணம்.
- ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,
சர்வதேச போலீசை அணுகுவோம்!
காங்., - எம்.பி., கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத்தின் நண்பரான பாகிஸ்தானைச் சேர்ந்த அலி தவுகீர் ஷேக், நம் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதில் தேவைப்பட்டால், சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை நாடுவோம்.
- ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,