கிட்ஸ் கிளப் பள்ளியில் விளையாட்டு விழா

திருப்பூர்:திருப்பூரில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு விழா நடந்தது.

இதில், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர். கையுந்து பந்து போட்டியில், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா ஸ்ரீ ராம், இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ் மற்றும் பள்ளி முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement