காலிப்பணியிடம் நிரப்ப வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சித்ரா தலைமை வகித்தார்.

சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சம்பத், உழைக்கும் பெண் கன்வீனர் எல்லம்மாள் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட துணை தலைவர் சித்ராதேவி வாழ்த்தி பேசினார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துவங்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திவரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் நிலை மிக மோசமாக உள்ளது.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 20 முதல் 30 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், இந்த திட்டத்தில் புதிய வழிமுறைகளை பின்பற்ற நிர்பந்திப்பதை அங்கன்வாடி ஊழியர் சங்கம் கண்டிக்கிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சிறப்பாக செயல்பட, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். 1993 மேற்பார்வையாளர் பதவி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும்.

மேற்பார்வையாளர் காலிப்பணியிடம் இல்லையென்றால், சமூக நலத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Advertisement