அவிநாசி கோவில் வளாகத்தில் தீத்தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு

அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் கால மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு நடந்தது.
அவிநாசி கோவிலில் பணி புரியும் அலுவலர்கள், ஊழியர்கள், சிவாச்சாரியார்களுக்கு, தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கத்தை அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் செய்து காட்டினார்.
தீயணைப்பு நிலைய இன்ஸ்பெக்டர் நவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கவச ஆடை அணிந்து பெரும் தீ விபத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை காப்பாற்றுவது, வீடுகளில் சமையல் கேஸ் கசிந்து இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.