ரோட்டில் வீசப்படும் கழிவுகளால் குப்பை தொட்டியாகும் 'நெடுஞ்சாலை'

பல்லடம்:பல்லடத்தில், ரோட்டில் வீசப்படும் கழிவுகளால், தேசிய மாநில நெடுஞ்சாலைகள், கழிவுகள் வீசும் குப்பைத் தொட்டியாக மாறி வருகின்றன.
பல்லடம் வழியாக செல்லும் கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உட்பட, பொள்ளாச்சி, உடுமலை, கொச்சி ஆகிய மாநில நெடுஞ்சாலைகளும், கேரள மாநிலத்தை இணைக்கின்றன. இதனால், பல்லடம் வழியாக கேரள மாநிலத்துக்கு சரக்கு போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இவ்வாறு, சரக்கு போக்குவரத்து என்ற பெயரில், சில கழிவுகளுடன் வரும் வாகனங்களும் இவ்வழியாக அதிக அளவில் செல்கின்றன.
அவ்வாறு, கழிவுகளுடன் வந்து செல்லும் சில வாகனங்கள், விதிமுறை மீறி, கழிவுகளை ரோட்டில் வீசி செல்கின்றனர். இதனால், பல்லடத்தில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், கழிவுகள் கொட்டப்படும் குப்பை தொட்டிகளாக மாறி வருகின்றன. குறிப்பாக, கோழி இறைச்சி மற்றும் முட்டை கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஒருபுறம் ஏற்பட, பறவைகள் மற்றும் விலங்குகளால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில் அருகிலும், புதிதாக கட்டப்பட்டு வரும் டோல்கேட்டை ஒட்டியும், அழுகிய கோழி முட்டைகள் பெட்டி பெட்டியாக கொட்டப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இடைவெளி விட்டு, பல்வேறு இடங்களில், 50க்கும் மேற்பட்ட முட்டை பெட்டிகள் ரோட்டில் வீசப்பட்டுள்ளன.
இவற்றால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
விதிமுறைகளை மீறி இது போன்ற கழிவுகள் கொட்டும் வாகன ஓட்டிகளை கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சிக்னல் பழுதால் சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்! பயணிகள் பாதிப்பு
-
மாணவர் உயிரிழப்பு; பள்ளியில் விழிப்புணர்வு
-
சேலம் - கொச்சின் விமான சேவை: வரும் 30 முதல் தினமும் இயக்கம்
-
ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினரும் தர்ணா
-
பஸ்கள் இயக்கத்தால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
-
ஆசிரியரல்லா பணியிடம் நிரப்ப தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு