கத்தியுடன் காரில் வலம் மாணவர்கள் 4 பேர் கைது

சென்னை:ராயப்பேட்டை, பாலாஜி நகர் 2வது தெருவில், நேற்று இரவு 7:30 மணியளவில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வலம்வந்த காரை மடக்கிய போலீசார், அதில் இருந்த நான்கு பேரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில், நான்கு பேரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, காரை போலீசார் சோதனை செய்தனர். இதில், கத்தி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், நால்வரும் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இருவர் ராயப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் மயிலாப்பூர் மற்றொருவர் திருவல்லிக்கேணி என்பது தெரியவந்தது. நால்வரை கைது செய்த போலீசார், கார், கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் கார் யாருடையது என்பதை கண்டறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement