ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு விசாரிக்க காங்., - எம்.எல்.சி., கோரிக்கை

பெங்களூரு: “பா.ஜ., ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க வேண்டும்,” என, காங்கிரஸ் எம்.எல்.சி., நாகராஜ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்ட மேலவையில் காங்கிரஸ் எம்.எல்.சி., நாகராஜ் யாதவ் நேற்று பேசுகையில், ''பா.ஜ., ஆட்சி காலத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் பெரிய அளவில், முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில், பணிகளை மேற்கொள்ள தலா 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பெலகாவி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்து இருக்கிறது,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, “நாகராஜ் யாதவ் மனைவியின் சொந்த ஊர் பெலகாவி. இதனால் அவருக்கு பெலகாவி மீது தனி பாசம்,” என்றார். இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து நாகராஜ் யாதவ் பேசுகையில், ''முறைகேடு குறித்து விவாதிக்க, அரைமணி நேரம் ஒதுக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் பதில் அளிக்கையில், ''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மாநிலத்தின் ஏழு நகரங்களில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகளால் 6,845 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. அதில் 6,472 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து