கடை ஓனரிடம் பணம் பறித்த நபர் கைது
குமரன் நகர்:ஜாபர்கான்பேட்டை, பாரி நகரைச் சேர்ந்தவர் முபாரக் அலி, 54. இவர், ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகர் 69வது தெருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2ம் தேதி மளிகை கடைக்கு வந்த சுரேஷ் என்பவர், முபாரக் அலியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியை காட்டி மிரட்டி, முபாரக் அலியின் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பறித்தார்.
இதில், முபாரக் அலி சத்தம் போடவே, கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை சுரேஷ் உடைத்தார்.
இது குறித்து குமரன் நகர் போலீசார் விசாரித்தனர். இதில், ஆர்.வி.நகரைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உட்பட, ஆறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இவரிடம் இருந்து, கத்தி மற்றும் 150 ரூபாய் மீட்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழநி மாரியம்மன் கோயிலில் மாசி விழா கொடியேற்றம்
-
சி.ஐ.எஸ்.எப்., தின கொண்டாட்டம்; 'சைக்கிளத்தான்' பேரணி 7ல் துவக்கம்
-
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழாவில் காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
-
தென்பெண்ணையில் நுரை; தீர்ப்பாயம் அறிக்கை கேட்பு
-
பிளஸ் 2வில் எந்த பிரிவு படித்திருந்தாலும் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம்: 'கியூட்' தேர்வுக்கு பின் வாழ்க்கை பிரகாசமே
-
சேதமான ரோடுகளை சீரமைப்பதில் கவனம் செலுத்தலாமே: மேடு, பள்ளங்களால் தொடர்கிறது விபத்து
Advertisement
Advertisement