குளத்தில் மீன் பிடித்த தொழிலாளி பலி

ஆவடி:அடுத்த பாலவேடு, கரணம் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவி, 38. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று மாலை 4:00 மணியளவில், பாலவேடு, இந்திரா நகரில் உள்ள சிறிய குளத்தில் பாபு மீன் பிடிக்க சென்றார்.
வெகு நேரமாக வீடு திரும்பாததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருவூர் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி, இரண்டரை அடி ஆழமுள்ள குளத்தில் இருந்து பாபுவின் உடலை மீட்டனர்.

ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement