தி.நகர் கொள்ளை சம்பவம் உ.பி., விரைந்தது தனிப்படை
சென்னை:தி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் ஜவுளி கடையில், 9 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடினர். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் இருவர், ஜவுளி கடை கட்டடத்தின் நான்காவது மாடியில் உள்ள துளை வழியாக உள் நுழைந்து, பால்சீலிங்கை உடைத்து, காசாளர் மேஜையில் இருந்த, 9 லட்சம் ரூபாயை திருடிச் சென்றது தெரிந்தது.
கொள்ளையர் குறித்து, மூன்று தனிப்படைகள் அமைத்து துப்பு துலக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவர்கள், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், தி.நகரில் தங்கி, கூலி தொழிலாளியாக வேலை பார்த்து, கொள்ளைக்கு நோட்டமிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் உ.பி., மாநிலத்திற்கு சென்று, கொள்ளையரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜ்யசபா 'சீட்' மறுப்பு: பிரேமலதா அதிர்ச்சி
-
விரிவாக்க மையங்களில் விதை, உரம் தர ஆய்வு
-
கண்ணகி கோயிலுக்கு ரோடு அமைக்கும் பிரச்னைக்கு தீர்வாகுமா: விழாவிற்கு முன் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல்
-
அனைத்து கட்சி கூட்டம்: த.வெ.க., முடிவில் திடீர் மாற்றம்
-
வெயில் தாக்கம் அதிகரிப்பால் வெறிச்சோடிய வைகை அணை பூங்கா
-
தி.மு.க.,வினர் சுயநலத்துக்காக கள்ளுக்கு தடை: பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement