24 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கோவை:கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, இன்று கோவையிலுள்ள 24 பள்ளிகளுக்கு கோவை கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளார்.
பள்ளிகளின் பட்டியல்:
ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி, வீராசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி, சவுடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித பிரான்சிஸ், ஜோசப் மற்றும் மேரீஸ் மகளிர் பள்ளி, மில்டன் மெட்ரிக் பள்ளி, சிருஷ்டி வித்யாலயா, வாசவி வித்யாலயா, மதர்லேண்ட் மெட்ரிக் பள்ளி, டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளி, ஐ.சி.சி.,நடுநிலைப்பள்ளி, நல்லாயன் துவக்கப் பள்ளி, மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒப்பணக்கார வீதி, ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, வி.எச்.சாலை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ.,ஆண்கள் பள்ளி, மன்பல் உலும் துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி, பிரசன்டேசன் கான்வென்ட் மகளிர் பள்ளி, மாரண்ணகவுடர் உயர்நிலைப் பள்ளிக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.