ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினரும் தர்ணா
மேட்டூர்: மேட்டூர், 840, 600 மெகாவாட் அனல்மின் நிலையங்கள், மின்பகிர்மான வட்டம், நீர்மின் உற்பத்தி நிலையங்களில், பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், மின்கழகமே நேரடியாக அடையாள அட்டை வழங்கவும் வலியுறுத்தி, அனல்மின் நிலைய வளாகத்தில், 5ம் நாளாக, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, தொழிலாளர்களின் மனைவி, குழந்தைகள், அனல் மின் நிலையம் வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் மின்கழகம் நடவடிக்கை எடுக்காதது, தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சண்பகராமன்(சமரசம்) பேச்சு நடத்த, கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலகத்துக்கு, மார்ச் 5(காலை), 11:00 மணிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement