பஸ்கள் இயக்கத்தால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளையில் இருந்து பெருமாகவுண்டம்பட்டி, நடுவனேரி காலனி, நான்கு ரோடு, நம்பியாம்பட்டி, சந்தைப்பேட்டை, மகுடஞ்சாவடி, சங்ககரி வழியே ஈரோடு வரை, பஸ் இயக்கப்பட்டது.
15 ஆண்டுக்கு முன், இந்த பஸ் நிறுத்தப்பட்டதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதிக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் மக்கள் கோரிக்கையால், நேற்று முன்தினம் முதல், அந்த தடத்தில் அரசு பஸ், தடம் எண்: 30, காலை, மாலையில், மாணவர்கள் பயன்பெறும்படி இயக்கப்படுகிறது.
இதனால் ஊர்மக்கள் நேற்று, பஸ்சுக்கு வாழை மரம், மாலையை கட்டிவிட்டனர். பின் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புத்துார் தலைவாசல் அருகே புத்துாருக்கு, பள்ளி நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தலைவர் சங்கரய்யா, ஊர்மக்கள், கடந்த மாதம் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், அமைச்சர் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர். இதையடுத்து ஆத்துார் முதல், தலைவாசல் வரை இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்(தடம் எண்: 35), நேற்று முதல், புத்துார் கிராமத்துக்கு நீட்டித்து இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், பட்டாசு வெடித்து பஸ்சை வரவேற்றனர். பின் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து