ஆசிரியரல்லா பணியிடம் நிரப்ப தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல், தமிழக அரசு, சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு, நேற்று முன்தினம் அனுப்பிய கடிதம்:
பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தில், 300 பேர் உறுப்பினராக உள்ளனர். பணி நிரந்தரம் கோரி, உறுப்பினர்கள் சார்பில், சென்னை தொழிற்தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிற்தகராறு சட்டத்தை மீறி செயல்பட்டதாக, துணைவேந்தர், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் மீது, சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பல்கலையில் காலியாக உள்ள, 80 ஆசிரியரல்லா பணியாளர்களை நியமனம் செய்வதற்கான ஒப்புதலை, இன்று நடக்க உள்ள, 117வது ஆட்சிக்குழு கூட்டத்தில், பொருள் நிரலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது சட்ட விரோதம். வழக்கு விபரங்கள் குறித்து, சிண்டிகேட்டுக்கு தெரிவிக்காமல், ஆதாயம் பெறுவதற்காகவே, பணி நியமன ஒப்புதலுக்கு துணைவேந்தர் செயல்படுகிறார். மேலும் ஓராண்டு பதவி நீடிப்பில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம், மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஓய்வு பெற, 3 மாதங்களுக்கு முன், எந்த நியமனமோ, பதவி உயர்வோ அளிக்க கூடாது என, உயர்கல்வித்துறை விதிகள் உள்ளன. துணைவேந்தரின் விதிமீறலுக்கு துணை போக வேண்டாம்.
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து