பணியின் போது கீழே விழுந்து கட்டட தொழிலாளி உயிரிழப்பு

கோவை:சிங்காநல்லுார் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

ரத்தினபுரி, சுப்பாத்தாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 47; கட்டட தொழிலாளி. மணிகண்டன் என்பவருடன் இருகூர், ராம் நகர் பகுதியில் உள்ள, சிவசங்கர் என்பவரது குடோனில் வேலைக்கு சென்றார்.

குடோனின் கூரையை கழற்றும் பணியில், செல்வகுமார் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.

தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

இதனால், அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement