குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

ஜலகண்டாபுரம்: இ.கம்யூ., கட்சியின், நங்கவள்ளி ஒன்றியம், 29வது மாநாடு, ஜலகண்டாபுரத்தில் நேற்று நடந்தது. தலைமை குழுவை சேர்ந்த வெங்கடாஜலம், சின்னதம்பி தலைமை வகித்தனர். அதில் மாநில துணை செயலர் வீரபாண்டியன், மாவட்ட செயலர் மோகன், விவசாய சங்க தலைவர் தங்கவேல் பேசினர்.


வரும், 16ல், நங்கவள்ளி ஒன்றிய அலுவலகம் முன், 100 நாள் வேலை திட்டத்தில், 3 மாதங்களாக வழங்காத சம்பள பாக்கியை வழங்குதல்; கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குதல்; சாலை, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க, ஆர்ப்பாட்டம் நடத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஒன்றிய செயலராக ஜீவானந்தம், பொருளாளராக அருணாசலம் உள்பட, 45 பேர் அடங்கிய, ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.

Advertisement