மாணவியை கடத்தியவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு

ஆத்துார்: தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்த, 17 வயதுடைய பிளஸ் 2 மாணவி, கடந்த, 1ல் வீட்டில் இருந்தார். அப்போது ராசிபுரத்தை சேர்ந்த, தக்காளி வியாபாரி நவீன்குமார், 21, திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டுள்ளார். மாணவியின் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இதனால் நவீன்குமார், மாணவியை கடத்திச்சென்று, நேற்று முன்தினம் திருமணம் செய்தார்.


இந்நிலையில் இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மீட்டு விசாரித்ததில், பாலியல் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனால் ஆத்துார் மகளிர் போலீசார், நவீன்குமார் மீது போக்சோ, குழந்தை திருமண தடுப்பு சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement